LOADING

Type to search

Tech News

தண்ணீர் துளி Notch மற்றும் In-Display கைரேகை Scanner உடன் Oneplus 6t வருகிறது.

Share

கடந்த மாதம், OPPO சீனாவில் OPPO R17 மற்றும் OPPO R17 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. தற்போது இதேபோன்ற வடிவமைப்புடன் வரவிருக்கும் OnePlus 6T போனும் இருப்பதாக தெரிகிறது. இன்று சில லீக்ஸ் வெளியாகியுள்ளன. OnePlus 6T இன் Retail Box ன் படங்கள் வெளியாகியுள்ளன.இதில் OPPO R17 ஸ்மார்ட்போன்களில் காணப்படும் V- வடிவ Edge களை கொண்ட Water Drop Notch உள்ளது.

அதுமட்டுமின்றி முதல் முறையாக In-display கைரேகை சென்சாரும் உள்ளது. இதுவரையில், Oneplus நிறுவனம் Fingerprint Sensors மட்டுமே பயன்படுத்தி வந்தது. . இந்தியாவில் Vivo X21 மற்றும் Vivo NEX ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே கைரேகை சென்சார்கள் மூலம் அறிமுகப்படுத்தபட்டன. வரவிருக்கும் Vivo V11ப்ரோ போனில் கூட in-display fingerprint scanner இருப்பதாக சொல்லப்படுகிறது.

OnePlus 6T யை பொறுத்தளவில் ஆண்ட்ராய்டு 9.0 Pie அடிப்படையிலான ஆக்ஸிஜன் OS உடன் வரலாம் என எதிர்பார்க்கிறேன். இந்த மாற்றங்களைத் தவிர, வயர்லெஸ் சார்ஜிங் ஏற்கும் வகையில் Glass Body வரலாம். Specifications அடிப்படையில், எந்த பெரிய மாற்றங்களும் இருக்காது. SNAPDRAGON 845 soc ல் 6 ஜிபி / 8 ஜிபி ரேமுடன் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

OnePlus 6 ல் “The speed you need ” என Tagline வந்தது போல OnePlus 6T ல் “Unlock the speed ” என Tagline வரவிருக்கிறது.

OnePlus 6T ஸ்மார்ட்போன் பற்றி உடனடி செய்திகளுக்கு Today Tech ல் இணைந்திருங்கள். அதுமட்டுமில்லாமல் இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கமண்ட் பண்ணுங்க.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *