LOADING

Type to search

Tech News

வரும் September 6 ல் India வில் Launch ஆகும் Vivo V11 Pro Specifications வெளியாகியுள்ளது

Share

வரும் செப்டம்பர் 6 ம் தேதி இந்தியாவில் Vivo நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் Vivo V11 Pro லான்ச் ஆக இருக்கிறது. ஆனால் விவோ நிறுவனமோ சமூக ஊடகங்களில் சில டீஸர்களைத் தவிர,  வேறு எந்த தகவல்களையும் அதிகபடியாக வெளியிடவில்லை , இருப்பினும்,சில லீக்ஸ்கள்  வெளியாகி உள்ளன. அதன்படி கீழ்க்கண்ட specs இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

டிஸ்ப்ளே பொறுத்தளவில் Oppo F9 புரோவில் உள்ளது போன்ற  ஒரு 6.41 அங்குல முழு HD + சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் தண்ணீர் துளி Notch உடன் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 SoC  மற்றும்  6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி storage  மற்றும்  256 ஜிபி வரை மைக்ரோ SD கார்டு இணைத்து கொள்ள முடியும்.

விவோ  V11 புரோவில்  12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் secondary லென்ஸ் கொண்ட ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு, AI வசதிமற்றும் ஸ்மார்ட்போன் இரவில் தெளிவாக தெரியும் 25 மெகாபிக்சல் AI selfie கேமரா, வேக சார்ஜ் செய்யும் திறன் கொண்ட  3,400mAh பேட்டரி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கூடுதலாக In display Fingerprint  scanner இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . Vivo V11 Pro க்கான விலை இன்னும் பிராண்டால் வெளியிடப்படவில்லை, ஆனால் விவோ V9 ஐ மனதில் வைத்து பார்க்கும்போது  ரூ. 20,000-ரூ. 25,000 விலையில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Tags:

You Might also Like

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *