Tech News

இந்தியாவிற்கு வரப்போகும் RedmiBook லேப்டாப்

சியோமி தனது மலிவு விலை ரெட்மி நோட்புக்குகளை இந்தியாவுக்குக் கொண்டு வர உள்ளது . இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தனது விலை அதிகமான மி நோட்புக் தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, . ஆனால் இந்திய சந்தை பட்ஜெட் மார்கெட் என்பது ஷியோமிக்கு தெரியாமல் இல்லை .எனவே சியோமி நிறுவனம் தனது ரெட்மிபுக்கை ரூ .30,000 விலையில் விற்க வாய்ப்புகள் உள்ளது.

ரெட்மிபுக் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது . இதில் புது வேரியன்ட்களை சியோமி இந்திய சந்தைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . இந்தியாவில் பட்ஜெட் நோட்புக் பிரிவு நிச்சயமாக லேப்டாப் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே smartphone ல் செய்தது போலவே Mi Notebookஐ Premium பிரிவிலும் , பட்ஜெட்டில் வாங்க விரும்புவோர் ரெட்மிபுக்கும் வாங்கலாம் .தற்போது பட்ஜெட் மடிக்கணினிகளுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் சியோமின் redmibook கிற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது,

தனது ரெட்மிபுக்கை ரூ .30,000 விலையில் விற்க வாய்ப்புகள் உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.