Motorola தனது சமீபத்திய பாப்-செல்பி கேமரா ஸ்மார்ட்போன் ஆன மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று ‘டீஸ்’ செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ ஸ்மார்ட்போன் வருகிற செவ்வாய்க்கிழமை அதாவது ஜூன் 16 அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை பிளிப்கார்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்தான் Motorola One fusion plus ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது .
Motorola One fusion plus விலை & விற்பனை:
பிளிப்கார்ட்டில் உள்ள Motorola One fusion plus டீஸர் பக்கம் ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது . ஆனால் வெளியீட்டு தேதியைத் தவிர்த்து வேறெந்த தகவலும் இல்லை. அதாவது என்ன விலை? எப்போது முதல் விற்பனை போன்ற விவரங்கள் எதுவும் இல்லை.
ட்விலைட் ப்ளூ மற்றும் மூன்லைட் ஒயிட் என்கிற இரண்டு கலர் விருப்பங்களில் வரும் இந்த லேட்டஸ்ட் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் + ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் சலுகை விவரங்கள் அடுத்த வாரம் தான் கிடைக்கும் என்பது போல் தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது தோராயமாக ரூ.25,400 க்கு இந்தியாவில் வாங்க கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் போட்டி நிறைந்த இந்திய சந்தையில் ரூ.18000 க்கு குறைவாக வந்தால் நல்ல விற்பனை இருக்கும்.
Motorola One fusion plus ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:
டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட Motorola One fusion plus ஆனது மற்ற லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா சாதனங்களைப் போலவே ஆண்ட்ராய்டு 10 கொன்டு இயங்குகிறது.
இது 6.5 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080×2,340 பிக்சல்கள், 19.5: 9 திரை விகிதம் மற்றும் 395 பிபி பிக்சல் அடர்த்தி) அளவிலான நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இது ஸ்னாப்டிராகன் 730 SoC மூலம் இயக்கப்படுகிறது, இது அட்ரினோ 618 ஜி.பீ.யூ மற்றும் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் மெமரியை பொறுத்தவரை 128 ஜிபி கொண்டுள்ளது. மேலும் ஒரு ஹைபிரிட் மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக (1TB வரை) மெமரி நீட்டிப்பிற்கான ஆதரவையும் வழங்குகிறது
கேமராவை பொறுத்தவரை, Motorola One fusion plus அதன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
அதில் எஃப் / 1.8 லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்சல் பிரதான கேமரா + எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் + எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.
முன்பக்கத்தை பொறுத்தவரை, பாப்-அப் கேமரா க்குள் அமைப்பிற்குள் ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை (எஃப் / 2.2)கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது . நிறுவனத்தின் அறிக்கையின்படி இது இரண்டு நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என தெரிகிறது.
மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ ஸ்மார்ட்போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட Fibgerprint sensor உள்ளது, மேலும் இது பிரத்யேக Google Assistant Buttonஐயும் கொண்டுள்ளது. இது 162.9×76.9×9.6 மிமீ மற்றும் 210 கிராம் எடையும் கொண்டுள்ளது. இந்த போனை பற்றிய உங்களது கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள் .