Tech News Trending

விற்பனைக்கு வருகிறது Nokia 5310

பேசிக் போன்களின் ராஜாவான நோக்கியா, தனது 5310 மாடல் மொபையலை விரைவில் இந்தியாவில் லான்ச் செய்ய உள்ளது . இப்போது இந்த  மொபைல் போன் சந்தைக்கு வரும் தேதி குறித்த விவரங்களை நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

இதுதொடர்பாக நோக்கியா இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் , வரும் ஜூன் 16-ம்தேதி விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த வாரம் செவ்வாய் அன்று முதல் நோக்கியா 5310 – ன் விற்பனை தொடங்குகிறது.

இதற்கு முன்பு கடந்த 2007-ல் நோக்கியா 5310 மியூசிக் மொபைல் வெளியானது. அதனை மேம்படுத்தி தற்போது புதிய மாடலை நோக்கியா லான்ச் செய்ய உள்ளது  இந்த நோக்கியா 5310 வெள்ளை, சிவப்பு, கருப்பு வண்ணங்களில் சந்தையில் கிடைக்கும். 

இந்த போன் நோக்கியா சீரிஸ் 30+ os , 2.4 இன்ச் Display, 2 ஸ்பீக்கர்கள், டச் இல்லாத Basical keypad ஆகியவற்றை கொண்டுள்ளது. 

ரேமை பொறுத்தவரை 8 எம்.பி.யாகவும், Internal storage 16 எம்.பியாகவும் இதில் உள்ளன . மைக்ரோ எஸ்.டி.யை பயன்படுத்தி 32 ஜி.பி. வரை மெமரியை அதிகப்படுத்த முடியும் .

ஒரு விஜிஏ கேமரா இதில் உள்ளது. 1,200 mAh பேட்டரி உள்ளது . ஸ்டேன்ட் பை மோடில், 30 நாட்கள் வரையில் போன் சார்ஜ் நீடிக்கும் என நோக்கியா தெரிவித்துள்ளது ,எம்.பி.3 எஃப்.எம். ரேடியோவும் இதில் உள்ளன. 

ஒரு நேரத்தில் ஒரேயொரு  சிம் மட்டும்தான் பயன்படுத்த முடியும்.

3G மற்றும் 4G இதில் சப்போர்ட் இல்லை ,2 ஜிக்கு மட்டுமே இந்தமொபைல் சப்போர்ட் செய்யும். அதிகபட்சம் ரூ. 3,200 க்கு இந்த மொபைல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள் .

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.