Search products/ Subscribe
← Reviews

Brave Ark Tablet Review: Laptop-க்கு மாற்றாக ஒரு Android Tablet?

Brave Ark Tablet packs a 12.95-inch 2.8K 144Hz display, Snapdragon 8s Gen 3, 12GB RAM, 14,550mAh battery, PC Mode, and an in-box stylus & kickstand case—making it a versatile 2-in-1 Android tablet for

GWritten by Gayathiri R · Reviewed by John Santhosh · 27 Nov 2026 · 4 min read

Brave Ark Tablet
Tamil Today Tech review Brave Ark Tablet
9/10

What's good

  • 12.95-inch 2.8K display with 144Hz refresh rate & 700 nits brightness.
  • Powerful Snapdragon 8s Gen 3 processor with 12GB RAM & microSD support.
  • Massive 14,550mAh battery for up to 2 days of usage.
  • 8-speaker setup (4 woofers + 4 tweeters) with DTS Audio.
  • Stylus and kickstand case included in the box.
  • Desktop-style PC Mode and optional backlit keyboard support.

Not so good

  • No Netflix HD streaming support.
  • 33W charging feels slow for a 14,550mAh battery.
  • Heavy (706g) compared to smaller tablets.
  • PC Mode cannot fully replace a full Windows laptop.
On this page
  1. 1Design & Display
  2. 2Key Specifications
  3. 3Performance & Gaming
  4. 4PC Mode & Keyboard
  5. 5Stylus & Accessories
  6. 6Battery & Software
  7. 7Brave Ark Tablet Price in India
  8. 8Pros & Cons
  9. 9Should You Buy Brave Ark Tablet?

வணக்கம் தமிழ் டுடே டெக் வாசகர்களே! ஒரு Tablet வாங்கும்போது பெரிய Display, நல்ல Performance, நீண்ட Battery Backup மற்றும் Laptop மாதிரியான Productivity Features கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் இவை அனைத்தையும் ஒரே Device-ல் பெறுவது எளிதான விஷயம் கிடையாது.

அந்த வகையில், Brave நிறுவனம் தனது Brave Ark என்ற 2-in-1 Android Tablet-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Students, Creators மற்றும் Professionals-ஐ Target செய்யும் இந்த Tablet-ல் 12.95-inch 2.8K Display, Snapdragon 8s Gen 3 Processor, 14,550mAh Battery, PC Mode மற்றும் Stylus Support என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக Stylus மற்றும் Kickstand Case ஆகியவற்றை Box-லேயே வழங்குவது இதன் கூடுதல் சிறப்பு. இந்த Tablet உண்மையில் Laptop-க்கு மாற்றாக இருக்குமா? இதன் Features எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

Brave Ark Tablet-ன் முழுமையான Video Review-ஐ Tamil Today Tech YouTube Channel-ல் பார்க்கலாம்.

Brave Ark Tablet hero view with stylus and kickstand case

Design & Display

Brave Ark Tablet-ன் Design-ஐ பார்க்கும்போது, Metal Unibody மற்றும் Minimal Design இதற்கு ஒரு Premium Look-ஐ வழங்குகின்றன. இதன் Thickness 7.6mm மட்டுமே. 14,550mAh பெரிய Battery இடம்பெற்றிருந்தாலும், Design-ஐ Slim-ஆக வைத்திருக்கிறார்கள். இருப்பினும், சுமார் 706g எடை இருப்பதால் ஒரு கையில் நீண்ட நேரம் பிடித்துப் பயன்படுத்தும்போது சற்று கனமாகத் தோன்றலாம்.

இதில் 12.95-inch IPS Display, 2.8K (2880 × 1840) Resolution மற்றும் 144Hz Refresh Rate Support வழங்கப்பட்டுள்ளது. மேலும், 700 nits Brightness இருப்பதால் Bright Environment-ல் பயன்படுத்துவதற்கும் ஏற்றதாக இருக்கிறது.

Movies, YouTube, Online Classes மற்றும் Reading போன்ற பயன்பாடுகளுக்கு பெரிய Display மற்றும் 8-Speaker (DTS Audio) Setup சிறந்த Experience-ஐ வழங்குகின்றன. ஆனால் Netflix-ல் HD Streaming Support இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது.

Brave Ark Tablet 12.95-inch 2.8K 144Hz display

Key Specifications

SpecificationDetails
Display12.95-inch 2.8K (2880 × 1840) IPS LCD, 144Hz, 700 nits
ProcessorQualcomm Snapdragon 8s Gen 3
RAM & Storage12GB RAM, 256GB Storage (Expandable up to 1TB via microSD)
Audio8 Speakers (4 Woofers + 4 Tweeters) with DTS Audio
Cameras13MP Rear (with LED Flash), 5MP Front
Battery & Charging14,550mAh, 33W Fast Charging (Charger in box)
StylusBrave Ark Pen (USI 2.0, 4,096 pressure levels) – Included
ConnectivityWi-Fi 6, Bluetooth 5.4, USB Type-C
SoftwareAndroid 15 with PC Mode (3 yrs OS + 3 yrs Security updates)
Build & Weight7.6mm Metal Unibody, ~706g (Galactic Blue)

Performance & Gaming

Brave Ark-ல் Qualcomm Snapdragon 8s Gen 3 Processor மற்றும் 12GB RAM வழங்கப்பட்டுள்ளது. இது Multitasking, Productivity Apps மற்றும் Heavy Gaming போன்ற பயன்பாடுகளுக்குத் தேவையான வேகத்தைத் தருகிறது.

நமது AnTuTu Benchmark சோதனையில் 1.8 Million-க்கும் அதிகமான Score கிடைத்துள்ளது. Gaming-ஐப் பொறுத்தவரை BGMI-ல் 90 FPS வரையும், Call of Duty Mobile-ல் 120 FPS வரையும் Smooth Gaming Support கிடைக்கிறது.

இந்த Performance மூலம் Daily Usage மட்டுமின்றி, Gaming மற்றும் Multitasking போன்ற பயன்பாடுகளுக்கும் இந்த Tablet-ஐத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

Brave Ark Tablet AnTuTu benchmark and performance view
Brave Ark Tablet gaming test

PC Mode & Keyboard

Brave Ark-ன் முக்கியமான Feature PC Mode. ஒரு Tap மூலம் Tablet-ஐ Desktop போன்ற Interface-க்கு மாற்றிக்கொள்ள முடியும். Multiple Windows பயன்படுத்துவது, Documents Manage செய்வது மற்றும் Productivity Tasks மேற்கொள்வது போன்றவற்றுக்கு இது மிகவும் உதவுகிறது.

இதனுடன் Backlit Bluetooth Keyboard-ஐ இணைத்துப் பயன்படுத்தும்போது Laptop போன்ற Working Experience கிடைக்கிறது. Keyboard-ல் Backlit Support மற்றும் Premium Finish வழங்கப்பட்டுள்ளது; குறைவான வெளிச்சம் உள்ள இடங்களிலும் வசதியாக Type செய்ய முடியும்.

Students Assignments எழுதுவதற்கும், Professionals Documents மற்றும் Emails-ஐ Manage செய்வதற்கும் இந்த Setup பயனுள்ளதாக இருக்கும்.

Brave Ark Tablet in PC Mode with keyboard
Brave Ark Tablet backlit Bluetooth keyboard

Stylus & Accessories

Brave Ark உடன் USI 2.0 Active Stylus (Brave Ark Pen) Box-லேயே வழங்கப்படுகிறது. இதில் 4,096 Pressure Levels மற்றும் Tilt Support இருப்பதால் Notes Taking, Sketching மற்றும் Drawing போன்ற பயன்பாடுகளுக்கு இயல்பான அனுபவத்தைத் தருகிறது.

Stylus-ல் எளிதான Charging வசதி மற்றும் Shortcut Functions வழங்கப்பட்டுள்ளன. Screenshot எடுப்பது போன்ற செயல்களையும் Stylus மூலமே உடனுக்குடன் மேற்கொள்ள முடியும்.

மேலும், Kickstand Case-ம் Box-லேயே வழங்கப்படுவதால் Accessories-ஐ தனியாக வாங்க வேண்டிய செலவு குறைகிறது.

Brave Ark USI 2.0 Active Stylus
Brave Ark Tablet kickstand case

Battery & Software

இந்த Tablet-ல் மிகப்பெரிய 14,550mAh Battery வழங்கப்பட்டுள்ளது. அன்றாடப் பயன்பாட்டில் சாதாரணமாக இரண்டு நாட்கள் வரை நீண்ட Battery Backup கிடைக்கிறது.

இதில் 33W Fast Charging Support உள்ளது; Charger-ம் Box-லேயே கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 14,550mAh Battery என்பதால் முழுமையாக Charge ஆகச் சற்று நேரம் எடுக்கும்.

Software-ஐப் பொறுத்தவரை Android 15-ல் இயங்குகிறது. Clean UI மற்றும் தேவையற்ற Bloatware Apps குறைவாக இருப்பதால் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கிறது. மேலும், 3 Years OS Updates மற்றும் 3 Years Security Updates வழங்கப்படும் என்று Brave நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Brave Ark Tablet battery and Android 15 UI

Brave Ark Tablet Price in India

இந்தியாவில் Brave Ark Tablet-ன் விலை மற்றும் Combo விவரங்கள்:

  • Tablet (12GB + 256GB) + Stylus + Kickstand Case: ₹37,999 (MRP: ₹45,000)
  • Keyboard Combo: ~₹43,000

இதற்கு Standard 1-Year Warranty வழங்கப்படுகிறது. QR Code மூலம் Product Registration செய்து Warranty Extension பெறும் வசதியும் உள்ளது. இதன் மூலம் கூடுதல் ஒரு வருட Warranty அல்லது 6 Months Display Protection Warranty-ஐ தேர்வு செய்யும் Option-ம் வழங்கப்படுகிறது.

தற்போதைய விலை மற்றும் Offers மாறுபடலாம். வாங்குவதற்கு முன்பு Brave Ark Official Store-ல் தற்போதைய Price மற்றும் Availability-ஐ சரிபார்த்துக்கொள்ளலாம்.

Pros & Cons

Pros

  • 12.95-inch 2.8K Display with 144Hz Refresh Rate
  • Snapdragon 8s Gen 3 Processor + 12GB RAM & 1TB microSD Support
  • 14,550mAh Battery (up to 2-day backup)
  • 8-Speaker Setup with DTS Audio
  • Stylus மற்றும் Kickstand Case Box-லேயே கிடைக்கிறது
  • PC Mode Support & Backlit Keyboard Accessory

Cons

  • பெரிய Display மற்றும் Battery காரணமாக எடை (~706g) அதிகம்
  • Netflix HD Streaming Support இல்லை
  • முழுமையான Windows Laptop Replacement ஆக எல்லா பயன்பாடுகளுக்கும் இருக்காது
  • 33W Charging, இந்த Battery Capacity-க்கு சற்று மெதுவாக உள்ளது

Should You Buy Brave Ark Tablet?

Brave Ark என்பது சாதாரண Entertainment Tablet மட்டுமல்ல. பெரிய Display, Powerful Processor, Stylus, PC Mode மற்றும் பெரிய Battery ஆகியவற்றை ஒரே Device-ல் வழங்கும் 2-in-1 Android Tablet.

Students, Online Classes, Notes Taking, Media Consumption, Multitasking மற்றும் Light Productivity Work-களுக்காக Tablet தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த Choice.

குறிப்பாக Stylus மற்றும் Kickstand Case Box-லேயே வழங்கப்படுவது இதன் Value-ஐ அதிகரிக்கிறது. Keyboard Combo-வுடன் பயன்படுத்தும்போது பல Laptop பயன்பாடுகளுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

ஆனால் Windows-only Software-களைப் பயன்படுத்த வேண்டியவர்கள் அல்லது Heavy Professional Work-களைச் செய்ய வேண்டியவர்கள் Laptop-ஐ தேர்வு செய்வதே சிறந்தது.

Overall, பெரிய Display, Powerful Performance மற்றும் Laptop போன்ற Productivity Features கொண்ட Android Tablet தேடுபவர்களுக்கு Brave Ark கண்டிப்பாகக் கவனிக்க வேண்டிய தேர்வு.

Brave Ark Tablet-ஐ வாங்க: Official Product Page

Brave Ark Video Review: Watch on YouTube

மேலும் Tech Reviews மற்றும் Gadgets பற்றிய தகவல்களுக்கு Tamil Today Tech Reviews பக்கத்தைப் பார்வையிடுங்கள்.

Keep reading

All reviews