Lumio Vision 9 55-Inch TV Review: 4 Months Later, Is This a Flagship Killer?
The Lumio Vision 9 55-inch TV offers a 4K QD-MiniLED display with 1,920 Mini LEDs, 144Hz gaming, Dolby Vision, 64GB storage, and a smooth Google TV experience. Here's our 4-month long-term review.
G
Written by Gayathiri R · Reviewed by John Santhosh · 28 Nov 2026 · 6 min read

What's good
- QD-MiniLED display with 1,920 Mini LEDs delivers strong brightness, contrast, and colour reproduction.
- 4K 144Hz and 1080p 240Hz refresh rate support make it a strong option for gaming.
- 3GB DDR4 RAM and 64GB storage provide a smooth, generous smart TV setup.
- Dolby Vision, HDR10, and HLG support enhance compatible HDR content.
- VRR, ALLM, and three HDMI 2.1 ports cover modern console and PC gaming needs.
- Android 14-based Google TV experience stayed smooth across 4+ months of use.
- 2-year comprehensive warranty adds extra peace of mind.
Not so good
- Dialogue clarity is good, but bass performance could be punchier.
- Viewing angles drop off when watching from extreme side positions.
- Local dimming has some limitations during console gaming.
- Minor software bug where selecting certain options occasionally closes the Settings menu.
On this page
- 1Lumio Vision 9 – Specifications
- 2Design & Build Quality
- 3Remote Experience
- 4Performance – Smooth Google TV Experience
- 5Display – 4K QD-MiniLED
- 6Gaming – 4K 144Hz
- 7Audio Quality
- 8Smart Features & Connectivity
- 9Service & Warranty
- 10Months of Usage – Our Experience
- 11Pros & Cons
- 12Final Verdict – Is Lumio Vision 9 Worth ₹54,999?
வணக்கம் தமிழ் டுடே டெக் வாசகர்களே!
ஒரு நல்ல Smart TV வாங்கும்போது Display Quality, Performance, Gaming Features, Storage என பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கும். இந்த Features எல்லாம் ஒரு TV-ல் கிடைக்கணும்னா பொதுவாக அதிக Budget செலவு செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால் ₹54,999 Launch Price-ல் 4K QD-MiniLED Display, 144Hz Refresh Rate, 3GB RAM, 64GB Storage என பல Premium Specifications-ஐ வழங்குகிறது Lumio Vision 9 55-Inch TV.
Specs மட்டுமல்லாமல், இந்த TV-யை நாங்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறோம். இந்த Long-Term Usage-ல் Display, Performance, Gaming மற்றும் Software Experience எப்படி இருக்கிறது என்பதை இந்த Review-ல் விரிவாகப் பார்க்கலாம்.
Watch our complete video review: Lumio Vision 9 – 4 Months Long-Term Review on Tamil Today Tech

Lumio Vision 9 – Specifications
| Specification | Details |
|---|---|
| Screen Size | 55-Inch |
| Resolution | 4K UHD |
| Display | QD-MiniLED |
| Mini LEDs | 1920 |
| Typical Brightness | 450 Nits |
| Peak Brightness | 800 Nits |
| Refresh Rate | 4K 144Hz / 1080p 240Hz |
| Processor | MediaTek Pentonic 700-based Lumio BOSS Processor |
| RAM | 3GB DDR4 |
| Storage | 64GB |
| Operating System | Android 14 Based Google TV |


Design & Build Quality
Lumio Vision 9-ன் Design minimalistic-ஆவும் premium-ஆவும் இருக்கிறது. Top, Left, Right sides-ல் Slim Bezels கொடுத்திருக்கிறார்கள். Bottom பகுதியில் Lumio Logo உடன் கொஞ்சம் தடிமனான Chin இருக்கிறது.
TV-க்கு இரண்டு Metal Legs கொடுக்கப்பட்டிருக்கின்றன. Build Quality நல்லதாகவும் TV-யை Stable-ஆக Hold செய்யும் வகையிலும் இருக்கிறது. Rear-ல் Connectivity Ports அனைத்தும் Left Side-ல் Outward Facing-ஆக இருப்பதால் Cable Connections செய்வது எளிதாக இருக்கும்.




Remote Experience
இதில் Minion Remote 2 கொடுக்கப்பட்டிருக்கிறது. Lightweight Design, Comfortable Grip மற்றும் தேவையான Buttons மட்டும் கொண்ட Layout ஆகியவை Daily Usage-க்கு வசதியாக இருக்கின்றன.
Netflix, YouTube, Prime Video போன்ற Apps-க்கு Direct Hotkeys மற்றும் Google Assistant Voice Search Support இருக்கிறது. நான்கு மாத Usage-லும் Remote Experience எங்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் ஒன்று.

Performance – Smooth Google TV Experience
Lumio Vision 9-ன் முக்கியமான Highlight அதன் Hardware Configuration:
| Hardware | Details |
|---|---|
| Processor | MediaTek Pentonic 700-based Lumio BOSS Processor |
| RAM | 3GB DDR4 |
| Storage | 64GB |
| OS | Android 14 Based Google TV |
3GB RAM மற்றும் 64GB Storage Combination, Smart TV Usage-க்கு நல்ல Hardware Configuration. OTT Apps Install செய்வதற்கும் பல Applications பயன்படுத்துவதற்கும் 64GB Storage ஒரு பெரிய Advantage.

Google TV Navigation, App Switching மற்றும் App Opening போன்றவற்றில் எங்களுடைய Usage-ல் நல்ல Smoothness கிடைத்தது. நான்கு மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்திய பிறகும் Noticeable Slowdown எங்களுக்குத் தெரியவில்லை.


Display – 4K QD-MiniLED
Lumio Vision 9-ல் 55-Inch 4K QD-MiniLED Display பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் Backlight System-ல் 1,920 Mini LEDs மற்றும் Precision Local Dimming Technology இடம்பெற்றுள்ளது.
| Display Specification | Details |
|---|---|
| Panel | QD-MiniLED |
| Resolution | 4K UHD |
| Mini LEDs | 1920 |
| Typical Brightness | 450 Nits |
| Peak Brightness | 800 Nits |
| Colour Coverage | 82% Rec.2020 / 113% DCI-P3 |
| Picture Engine | DOPE Display 2 |
| Local Dimming | Precision Local Dimming |
| HDR | Dolby Vision, HDR10, HLG |
MiniLED Technology மூலம் Screen-ன் வெவ்வேறு பகுதிகளில் Brightness-ஐ Control செய்ய முடியும். இதனால் Bright Areas மற்றும் Dark Areas இடையே நல்ல Contrast கிடைக்க உதவுகிறது.
Movies, YouTube Videos மற்றும் Web Series பார்க்கும்போது Colours Vibrant-ஆகவும் Details Sharp-ஆகவும் இருக்கின்றன. HDR Content பார்க்கும்போது Display-ன் Performance இன்னும் சிறப்பாகத் தெரிகிறது.
Dolby Vision, HDR10 மற்றும் HLG Support இருப்பதால் Compatible Content-ல் நல்ல HDR Experience கிடைக்கிறது.


ஆனால் Viewing Angle-ஐப் பொறுத்தவரையில், EVA Panel-ல் Extreme Side Angles-ல் பார்க்கும்போது Colours மற்றும் Contrast கொஞ்சம் மாறலாம். நேருக்கு நேராகப் பார்க்கும்போது Picture Quality நல்லதாக இருக்கிறது.
Overall, இந்த Price Segment-ல் QD-MiniLED Display கிடைப்பது ஒரு முக்கியமான Advantage.
Gaming – 4K 144Hz
Gaming-க்கு தேவையான பல முக்கியமான Features இந்த TV-ல் இடம்பெற்றுள்ளன:
| Gaming Feature | Support |
|---|---|
| Native Refresh Rate | 4K 144Hz |
| High Refresh Rate | 1080p 240Hz |
| VRR | Yes |
| ALLM | Yes |
| HDMI | HDMI 2.1 |
| Gaming Latency | 9.7ms (Company Claim) |

4K 144Hz, VRR மற்றும் ALLM போன்ற Features, Compatible Gaming Devices-ல் Smooth மற்றும் Responsive Gaming Experience கிடைக்க உதவுகின்றன.
PS5, Xbox மற்றும் Gaming PC பயன்படுத்துபவர்களுக்கு இந்த Features பயனுள்ளதாக இருக்கும். ஆனால் TV 144Hz Support செய்கிறது என்பதால் எல்லா Console Games-ம் 144FPS-ல் இயங்கும் என்று அர்த்தமில்லை. Game மற்றும் Connected Device Support-ம் அவசியம்.
Console Gaming-ல் Local Dimming தொடர்பான சில Limitations இருக்கலாம். PS5 HDR Settings-ஐயும் தேவைக்கேற்ப Manual-ஆக Tune செய்ய வேண்டியிருக்கலாம்.
Audio Quality
| Audio Specification | Details |
|---|---|
| Output | 24W |
| Speaker Setup | Quad Driver |
| Drivers | 2 Full Range + 2 Tweeters |
| Audio Tuning | DGS 2.0 |
| Dolby Support | Dolby Audio, Dolby Atmos |
| eARC | Yes |
Movies மற்றும் Web Series பார்க்கும்போது Dialogue Clarity நல்லதாக இருக்கிறது. Background Music இருந்தாலும் Dialogues தெளிவாகக் கேட்கின்றன.
ஆனால் Bass Performance Decent-ஆக மட்டுமே இருக்கிறது. Dedicated Soundbar-ல் கிடைக்கும் Punchy Bass எதிர்பார்க்க முடியாது. Normal Usage-க்கு Speakers போதுமானதாக இருந்தாலும், Powerful Audio Experience தேவைப்படுபவர்கள் Soundbar பயன்படுத்தலாம்.
HDMI eARC Support இருப்பதால் Soundbar Connect செய்வதும் எளிது.
Smart Features & Connectivity
Lumio Vision 9 Android 14 Based Google TV OS-ல் இயங்குகிறது. Chromecast Built-in இருப்பதால் Smartphone-ல் இருந்து Content Cast செய்யலாம்.
TLDR V2 மூலம் OTT Platforms-ல் Movies, Web Series மற்றும் Live Sports Content-ஐ Discover செய்யலாம். Neo on TLDR Feature மூலம் WhatsApp அல்லது Instagram வழியாக Content Play செய்யும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
Connectivity & Ports
| Connectivity | Details |
|---|---|
| Wi-Fi | Dual-Band |
| Bluetooth | 5.0 |
| HDMI | 3 × HDMI 2.1 |
| HDMI 2 | 4K 144Hz + eARC |
| HDMI 3 | 4K 144Hz |
| USB | 1 × USB 3.0, 2 × USB 2.0 |
| USB File System | exFAT, NTFS |
| Ethernet | Yes |
| Optical Audio | Yes |
| 3.5mm Jack | Yes |
| Satellite Port | Yes |
Gaming Consoles, Soundbars, External Storage மற்றும் Wired Internet போன்ற தேவைகளுக்குப் போதுமான Connectivity Options இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

Service & Warranty
Lumio Vision 9-க்கு 2 Years Comprehensive Warranty வழங்கப்படுகிறது. Lumio தெரிவிப்பதன்படி, இந்தியா முழுவதும் 300-க்கும் மேற்பட்ட Service Centres மற்றும் 19,000-க்கும் மேற்பட்ட Pin Codes-ல் Service Coverage உள்ளது.
ஒரு TV-யை Long-Term பயன்படுத்தும்போது After-Sales Support முக்கியமானது. Warranty மற்றும் Service Network இந்த TV-க்கு ஒரு Positive Point.
Months of Usage – Our Experience
நான்கு மாதங்களுக்கும் மேலான Usage-ல் எங்களுடைய Overall Experience Positive-ஆக இருந்தது:
- Performance: UI மற்றும் App Navigation இன்னும் Smooth-ஆக இருக்கிறது.
- Display: Movies, YouTube மற்றும் Web Series பார்க்க நல்ல Picture Quality கிடைக்கிறது.
- Audio: Daily Usage-க்கு Dialogue Clarity போதுமானதாக இருக்கிறது.
- Reliability: எங்களுடைய Usage-ல் எந்த Major Hardware அல்லது Software Issue-ம் ஏற்படவில்லை.
எங்களுடைய Experience-ஐ வைத்து இந்த TV-யை Recommend செய்ய முடிகிறது. ஆனால் Usage மற்றும் TV Unit-ஐப் பொறுத்து மற்ற Users-க்கு Experience மாறலாம்.

Pros & Cons
நன்மைகள் (Pros)
- இந்த TV-யில் இருக்கும் QD-MiniLED display மற்றும் 1920 Mini LEDs காரணமாக, படங்களில் நல்ல brightness, colour reproduction மற்றும் contrast கிடைக்கிறது.
- 4K resolution-ல் 144Hz refresh rate மற்றும் 1080p-ல் 240Hz support இருப்பதால், gaming-க்கு தேவையான flexibility கிடைக்கிறது.
- Pentonic 700 processor, 3GB RAM மற்றும் 64GB internal storage ஆகியவை TV-யின் overall performance-க்கு நல்ல support கொடுக்கின்றன.
- Dolby Vision, HDR10 மற்றும் HLG போன்ற HDR formats support செய்வதால், compatible content-ஐ நல்ல visual quality-யில் பார்க்க முடிகிறது.
- VRR, ALLM மற்றும் HDMI 2.1 போன்ற gaming features இருப்பது gamers-க்கு கூடுதல் advantage.
- Android 14 Based Google TV experience மற்றும் 64GB storage இருப்பதால், apps install செய்வதற்கும் smart TV usage-க்கும் வசதியாக இருக்கிறது.
- 2 வருட comprehensive warranty வழங்கப்படுவது இந்த TV-க்கு ஒரு கூடுதல் நம்பிக்கை அளிக்கிறது.
குறைபாடுகள் (Cons)
- TV-யின் audio quality நல்ல clarity கொடுத்தாலும், bass performance இன்னும் கொஞ்சம் மேம்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
- Side angle-ல் இருந்து பார்க்கும்போது, viewing experience அனைவருக்கும் ஒரே மாதிரியான satisfaction கொடுக்காது.
- Gaming பயன்படுத்தும்போது Local Dimming தொடர்பான சில limitations இருக்கின்றன; குறிப்பாக சில சூழல்களில் இதை கவனிக்க முடியும்.
- TV Settings-ல் சில options-ஐ select செய்யும்போது, menu முழுவதுமாக close ஆகும் சிறிய software bug-ஐ நாங்கள் கவனித்தோம்.
Final Verdict – Is Lumio Vision 9 Worth ₹54,999?
₹54,999 Launch Price-ல் Lumio Vision 9 55-Inch TV, Display, Performance மற்றும் Gaming Features என முக்கியமான விஷயங்களை Balance செய்து வழங்குகிறது.
QD-MiniLED Display, 4K 144Hz Refresh Rate, 3GB RAM, 64GB Storage, Dolby Vision, Google TV மற்றும் 2 Years Comprehensive Warranty என இந்த Price-ல் கிடைக்கும் Features நல்ல Combination-ஆக இருக்கின்றன.
குறிப்பாக, நான்கு மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்திய எங்களுடைய Experience-ல் Display Quality நல்லதாக இருக்கிறது. Performance இன்னும் Smooth-ஆக இருக்கிறது. Daily Usage-ல் பெரிய பிரச்சினைகளும் எங்களுக்கு ஏற்படவில்லை.
நீங்கள் நல்ல Display Quality, Smooth Smart TV Experience மற்றும் Gaming Features கொண்ட TV தேடுகிறீர்கள் என்றால் Lumio Vision 9-ஐ Definitely Consider செய்யலாம்.
ஆனால் TV-யில் Heavy Bass எதிர்பார்க்கிறவர்கள் Soundbar-க்கான Budget-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல், அதிகமான Side Angles-ல் TV பார்க்கும் Setup இருந்தால் Viewing Angle-ஐயும் கவனிக்க வேண்டும்.
எங்களுடைய நான்கு மாத Real-World Usage அடிப்படையில், Lumio Vision 9 55-Inch TV-யை Recommend செய்கிறோம்.
Buy Lumio Vision 9 55-Inch: Official Lumio Store – Lumio Vision 9
Watch the full review: Lumio Vision 9 – 4 Months Long-Term Review | Tamil Today Tech
Explore more reviews: Tamil Today Tech Reviews



