வணக்கம் Tamiltodaytech நண்பர்களே! Oneplus கம்பெனியோட புது போன், Oneplus Nord 5, மார்க்கெட்டுக்கு வந்திருக்கு. இந்த போன்ல என்னெல்லாம் இருக்கு, நமக்கு இது எப்படி யூஸ் ஆகும்னு ஒரு டீடெயிலான அனாலிசிஸ் பாப்போம் வாங்க. இது நம்மளோட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமான்னு தெரிஞ்சுக்கலாம்!

Design எப்படி இருக்கு?

Oneplus Nord 5 கையில எடுத்தா ஒரு பிரீமியம் ஃபீல் கொடுக்குது. பின் பக்கம் Glass மெட்டீரியல்ல இருக்கு. சைடுல இருக்குற ஃபிரேம் (Frame) Plastic தான். முன்னாடி Corning Gorilla Glass 7i பாதுகாப்புடன் ஒரு Flat Display இருக்கு, சுத்தி சின்னதா Bezels இருக்கிறதால Display பாக்க நல்லா இருக்கு.Under-display fingerprint reader ரொம்ப Fast & அக்யூரஸியாவும் வேலை செய்யுது.

Attractive Sun lit Beaches design

Phone வெயிட் (211g) அப்புறம் Thickness (8.1mm) நல்லா மெயின்டெயின் பண்ணியிருக்காங்க, அதனால ஹேண்டில் பண்றதுக்கு ஈஸியா இருக்கு. IP65 Protection இருக்கிறதால தண்ணி, தூசிக்கு 360 டிகிரி பாதுகாப்பு கொடுக்குது. அதாவது, டெய்லி யூஸ்ல தண்ணி தெரிச்சாலோ, ஏதாவது கொட்டுனாலோ ஒன்னும் ஆகாது. Marble Sands, Dry Ice, Phantom Grey-ன்னு மூணு கலர்ல கிடைக்குது. ஒவ்வொரு கலரும் தனித்துவமா இருக்கு.

Display எப்படி இருக்கு?

Oneplus Nord 5-ல 6.83 இன்ச் Swift AMOLED Display இருக்கு. இது Ultra HDR சப்போர்ட் பண்றதால வீடியோஸ்லாம் பாக்கும்போது Viewing angle அப்புறம் கலர்லாம் நல்லா இருக்கு. 1.5K High resolution அப்புறம் வெயில்ல 1400 nits High Brightness, வெளியில 1800 nits Peak Brightness இருக்குறதால டிஸ்ப்ளே ரொம்ப தெளிவா இருக்கு.

Bright Display

144 Hz Refresh Rate ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்ல இருக்குற மாதிரி இருக்கு. அதனால போன் ரொம்ப ஸ்மூத்தாவும், அல்ட்ரா-பிரைட்டாவும் இருக்கு. Aqua Touch 2.0ங்கற வசதி இருக்கிறதால, கை ஈரமா இருந்தாலோ, எண்ணெய் பசையா இருந்தாலோ Touch response கரெக்ட்டா இருக்கும். அப்புறம், 3,840 Hz PWM டிம்மிங் அப்புறம் Advanced Eye care algorithms இருக்கிறதால, ரொம்ப நேரம் ஸ்கிரீன் பாத்தாலும் கண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராது. HDR 10+ சப்போர்ட் பண்ணுது.

Battery எப்படி?

Nord 5-ல 6800 mAh ஹை டென்சிட்டி பேட்டரி இருக்கு. 80W SuperVOOC Fast Charging இருக்கிறதால, போனை ஃபுல்லா சார்ஜ் பண்ண வெறும் 54 நிமிஷம்தான் ஆகுது. அதுமட்டுமல்லாமல் 18W PD Charging , 33W PPS Charging மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கும் சப்போர்ட் பண்ணுது. ஒரு நாள் Full லா ஸ்கிரீன் ஆன் டைம் (SOT) கிடைக்குது. Battery Health Engine ங்கற ஒரு ஸ்பெஷல் Feature இருக்கு. இது நாலு வருஷம் யூஸ் பண்ணாலும் பேட்டரி கெப்பாசிட்டி 80%க்கு மேலயே இருக்கும். Bypass charging டெக்னாலஜி இருக்கிறதால, கேம் விளையாடும்போது பேட்டரி வழியா இல்லாம டைரக்டா சார்ஜர்ல இருந்து பவர் எடுத்துக்கும். இது பேட்டரி லைஃப்க்கு நல்லது.

Big Battery

Sound quality எப்படி?

Nord 5-ல Stereo Speakers இருக்கு. சவுண்ட் குவாலிட்டி நல்லா இருக்கு அப்புறம் ஆழமா இருக்கு. கேக்குறதுக்கு நல்ல Feel கொடுக்குது

Camera எப்படி இருக்கு?

புகைப்படம் எடுக்கிறதுல ஆர்வம் இருக்கறவங்களுக்கு Nord 5 ஒரு நல்ல Choice. இதுல ரெண்டு பின் கேமரா இருக்கு. முன்னாடி 50MP செல்ஃபி கேமரா (Flagship cameras front and back) இருக்கு.

பின் கேமரா (Rear Camera) Settup 50MP LYTIA 700-OIS மெயின் கேமராவும் (Main camera) ஒரு 8MP IMX 355 சென்சாரும் (Sensor) இருக்கு. மெயின் கேமரால Dynamic range நல்லா இருக்கு. போட்டோஸ்லாம் நேச்சுரலா, கலர்ஸ் Braight , Details தெளிவா வருது. அட்வான்ஸ்டு HDR Advanced HDR algorithms இது பயன்படுத்துது.

Portrait போட்டோஸ்ல Background blur Edge detection நல்லா இருக்கு. Low light கூட, டீடெயில்டா, பிரைட்டான போட்டோஸ் எடுக்குது, Noise இல்ல. 8MP Ultra-wide camera நல்ல போட்டோஸ் எடுக்குது. Live photo ஆப்ஷனும் இருக்கு, இது ஷட்டர் அமுக்குறதுக்கு 1.5 செகண்ட் முன்னாடியும் பின்னாடியும் இருக்கற மொமெண்ட்டை ரெக்கார்ட் பண்ணும். பின் கேமரால 4K @ 60 fps வீடியோ எடுக்கலாம். Stabilisation, colours, Details நல்லா இருக்கு. இது Vlogging அப்புறம் Cinematic storytelling ஏத்ததா இருக்கும்.

முன்னாடி இருக்குற 50MP f/2.0 செல்ஃபி கேமரா (Dual VTG Technology) நேச்சுரலான தோற்றத்தையும், ஸ்கின் டோனை (Skin tone) மேம்படுத்தியும் காட்டுது. இந்த டெக்னாலஜி இமேஜ் நாய்ஸை (Image noise) குறைச்சு, முக்கியமா காம்ப்ளெக்ஸ் லைட்டிங் (Complex lighting) கண்டிஷன்ஸ்ல டைனமிக் ரேஞ்சை (Dynamic range) நல்லா பண்ணுது. முன்னாடி கேமராலயும் 4K @ 60 fps வீடியோஸ் எடுக்கலாம். Stabilization, Colours, Details எல்லாம் நல்லா இருக்கு.

Performance எப்படி?

One Plus சீரிஸ்லயே முதல் தடவையா, Nord 5-ல Snapdragon 8S Gen 3 (4nm) சிப்செட் (Chipset) கொடுத்துருக்காங்க . இது பெர்ஃபார்மன்ஸை வேற லெவலுக்கு கொண்டு போகுது. இந்த போன்ல செக்மென்ட்லயே பெரிய VC கூலிங் சிஸ்டம் (VC Cooling System) இருக்கு. 7300mm² Vapour Chamber கொண்ட Cryo-velocity VC Cooling System, எப்பவும் நல்ல பெர்ஃபார்மன்ஸை (Stable peak performance) மெயின்டெயின் பண்ணும்னு டிசைன் பண்ணிருக்காங்க.

AnTuTu ஸ்கோர் 1414820. அப்புறம் 74% ஸ்டெபிலிட்டி (Stability) இருக்கு. Wild Life Extreme Test-ல 90% ஸ்டெபிலிட்டி அப்புறம் Sling Shot Extreme-ல மேக்ஸ் அவுட் ஆயிருக்கு. BGMI மாதிரி கேம்ஸ்லாம் 120 FPS அல்ட்ரா-ஃப்ரேம்ரேட்ல (Ultra-framerate) கண்டினியூஸா விளையாடும்போது எந்த ஹீட் இஸ்யூவும் (Heat issue) இல்லை. வேணும்னா 90 FPS க்கும் கஸ்டமைஸ் (Customize) பண்ணிக்கலாம். Oneplus Nord 5-க்கு TUV SUD Fluency 72 மாசத்துக்கு (6 வருஷம்) “A” Rating கொடுத்திருக்காங்க. இது பல வருஷம் Fast and Smooth ஆகவும் இருக்கும்.

Software அப்புறம் Storage எப்படி?

Nord 5 Android 15 அடிப்படையிலான Oxygen OS உடன் வருது. 4 வருஷத்துக்கு Software updates அப்புறம் 6 Years Security patches கிடைக்கும். இதுல 12GB LPDDR5X RAM அப்புறம் 256GB UFS 3.1 Storage Option இருக்கு. Reading அப்புறம் Writing Speed நல்லா இருக்கு.

Android 15 with New features

One Plus AI அம்சங்கள் என்னென்ன?

OnePlus Nord 5-ல புதுசா Oneplus AI வசதிகள் இருக்கு. இது AI-யால இயங்குற Powerfull Personalization கொடுக்குது. ‘Plus Key’ங்கற ஒரு பட்டன் இருக்கு. இது ‘Plus Mind’க்கு உடனடி Access கொடுக்குது. ‘Plus Mind’ Nord 5-ஐ ஒரு பெர்சனல் அசிஸ்டென்ட்டா (Personal Assistant) மாத்தி, நம்மளோட Daily Information தேவைகளை புரிஞ்சுக்கிட்டு, Organise பண்ணி, சப்போர்ட் பண்ணுது.

‘AI Search’ல நம்ம நார்மலா பேசுற மாதிரி கேள்விகள் கேட்டு தேடலாம். Files, Settings,Notes எதுவா இருந்தாலும், AI Search நம்ம சிஸ்டம் Full லா ஸ்கேன் பண்ணி, நமக்கு ஏத்த ரிசல்ட்ஸை (Results) கொடுக்குது. இது ஒரு கமெண்ட் மாதிரி இல்லாம Conversation மாதிரி இருக்கும். ‘AI Call Assistant’ அப்புறம் ‘AI Translation’ வசதிகள், OnePlus Dialerல Live call translation அப்புறம் Summarization கொடுக்குது. இது Text, Live Voice, Conversation, Camera, Screen Translation-னு அஞ்சு விதமான Translation மோட்ஸ்ல இருக்கு. 29 மொழிகளை சப்போர்ட் பண்ணுது.

AI Features

‘AI Voice Scribe’ங்கற அம்சம் ஆடியோ, வீடியோல பேசி பண்ற விஷயங்களை ரெக்கார்ட் பண்ணி, சுருக்கி, மொழிபெயர்க்க உதவும். இது 20க்கும் அதிகமான மொழிகளை சப்போர்ட் பண்ணுது. சம்மரிஸ்லாம் டைரக்டா நோட்ஸ்ல (Notes) சேவ் ஆகும். Live Translation ஸ்கிரீன்ல சப்-டைட்டில்ஸா (Subtitles) வரும்.Full Transcription ஐ கூட நோட்ஸ்ல சேவ் பண்ணிக்கலாம். WhatsApp, Instagram, Telegram, Snapchat, Zoom, YouTube மாதிரி நிறைய Apps ல இது Integrate ஆகியிருக்கு.

‘AI Creativity’ங்கறது AI-powered editing tools மூலமா நம்ம Photos ஐ Professional ஆக எடிட் பண்ண உதவும். AI Eraser, AI Detail Boost, AI Unblur, AI Reflection Eraser, AI Reframe மாதிரி நிறைய Features இருக்கு. ‘Circle to Search’ங்கற ஒரு அம்சம் இருக்கு. ஸ்கிரீன்ல எந்த ஒரு பொருளையும் Circle பண்ணா, அந்த ஆப்ப விட்டு வெளிய போகாமலே உடனே தேடல் முடிவுகள் வரும். AI Privacy பத்தி சொல்லனும்னா, நம்ம டேட்டா (Data) பாதுகாப்பா இருக்கு. Oneplus இல்ல வேற யாருமோ நம்ம இன்ஃபர்மேஷனை (Information) ஆக்சஸ் பண்ண முடியாது, எந்த டேட்டாவும் வெளிய Save ஆகாது.

Connectivity எப்படி?

இதுல Hybrid SIM Slot இருக்கு. Call quality தெளிவா இருக்கு, சத்தம் இல்லை. Signal reception நல்லா இருக்கு. 11 5G bands சப்போர்ட் பண்ணுது. Bluetooth 5.4, Wi-Fi 6, NFC சப்போர்ட், IR Blaster சப்போர்ட்லாம் இருக்கு.

கடைசி முடிவு (Verdict)

நீங்க ஒரு நல்ல கேமரா போன் அப்புறம் பிரீமியம் போன் தேடுறீங்கன்னா, 6.83 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவோட இருக்குற இந்த Oneplus Nord 5 உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். பெர்ஃபார்மன்ஸ்ல மத்த போன்களை விட நல்லா இருக்கு. இதுல ஒரு ஸ்டைலான டிசைன், நல்ல கேமராஸ், Fast charging இருக்கு. ஒட்டுமொத்தமா, Oneplus Nord 5 5G ஒரு நல்ல சாய்ஸ்.

Oneplus Nord 5: Pros and Cons

நிறைகள் (Pros)குறைகள் (Cons)
பிரீமியம் டிசைன் (Premium Design)வயர்லெஸ் சார்ஜிங் இல்லை (No Wireless Charging)
சூப்பர் டிஸ்ப்ளே (Super Display)கேமரா சாஃப்ட்வேர் ஆப்டிமைசேஷன் (Camera Software Optimization)
நல்ல பெர்ஃபார்மன்ஸ் (Good Performance)விலை (Pricing)
பெரிய பேட்டரி (Bigg Battery)
ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging)
VC கூலிங் சிஸ்டம் (VC Cooling System)

இந்த Oneplus nord 5 பத்தி உங்களுக்கு என்ன தோணுதுன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க! இன்னும் நிறைய டெக் நியூஸ் தெரிஞ்சுக்க நம்ம Tamiltodaytech கூடயே இணைஞ்சிருங்க.

Price : 8GB+256GB- 31999 12GB+256GB-34999 12GB+512GB-37999