வணக்கம் பாஸ்! நம்ம தமிழ் டுடே டெக் (TamilTodayTech.com) தளத்துக்கு உங்கள அன்பா வரவேற்கிறோம். ஒரு புது போன் வாங்கணும்னு நினைக்கும்போது, கையில இருக்குற பட்ஜெட் ரொம்ப முக்கியம்ல? அதிலயும் குறிப்பா, 15,000 ரூபாய் பட்ஜெட்ல எந்த போன் எடுத்தா கரெக்ட்டா இருக்கும்னு யோசிக்கிறது பெரிய தலைவலியா இருக்கும். உங்களுக்காகவே, இந்த பட்ஜெட்ல இருக்குற சில டாப் ஸ்மார்ட்போன்கள பத்தி இன்னிக்கு நாம டீட்டெயிலா பாக்கப் போறோம். Realme P3, Moto G85 5G, Poco X7, CMF Phone 1, அப்புறம் Vivo T4X/IQOO Z10X – இந்த அஞ்சு போன்ல எது உங்களுக்கு ஏத்த சாய்ஸ்னு இந்த கம்பேரிசன்ல தெரிஞ்சுக்கலாம் வாங்க!
Vivo T4X / IQOO Z10 X: பேட்டரி பேக்கப்ல பெஸ்ட்!
போன் சார்ஜ் நிக்கவே மாட்டேங்குதுன்னு ஃபீல் பண்றவங்களுக்கு Vivo T4X /IQOO Z10X தான் பெஸ்ட். 2025 மார்ச் மாசம் லான்ச் ஆன இந்த போன், Flipkart-ல 14,999 ரூபாய்க்கு கிடைக்குது (கார்டு ஆஃபரோட 13,299 ரூபாய்). இதுல MT 7300-4nm Processor இருக்கு, 2.5GHz ஸ்பீடுல ஒர்க் ஆகும். 6GB RAM, 128GB Storage-ஓட வருது. UFS 2.1-LPDDR4X ஸ்டோரேஜ் டைப் யூஸ் பண்ணிருக்காங்க. 8.02mm திக்னஸ், 204g வெயிட், 6.72 இன்ச் LCD FHD+ டிஸ்ப்ளே, 120Hz Refresh Rate கொண்டது.

50 MP Main camera + 2 MP Bokeh + 8 MP selfie camera இருக்கு. போட்டோ details , sharpness average ஆ தான் இருக்கு , லோ-லைட் பர்ஃபார்மன்ஸ் சுமாராத்தான் இருக்கும், ஷார்ப்னஸ் கம்மியா இருக்கும்னு சொல்றாங்க. Selfie கேமரா நல்லா இருக்கு
Android 15 with Fun touch Os இயக்க முறைமையில இயங்குது. மேலும் இதுல 2 years software update , 3 years security patch update தர்றாங்க. 44W சார்ஜிங் (சார்ஜர் பாக்ஸ்லயே இருக்கு), 6500mAh பேட்டரி, சைடு-மவுண்டட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்னு அம்சங்கள் இருக்கு.
சிறப்பு அம்சங்களா Millitari grade certification IP 64 , TUV Blue light certification இருக்கு.
CMF Phone 1: சாப்ட்வேர்ல பிஸ்தா? அப்ப இதுதான்!
சுத்தமான ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு நினைக்குறவங்களுக்கு CMF Phone 1 கரெக்ட்டா இருக்கும். Flipkart-ல 15,999 ரூபாய்க்கு கிடைக்குது (கார்டு ஆஃபரோட 12,824 ரூபாய்). இதுல MT 7300-4nm Processor இருக்கு, 2.5GHz ஸ்பீடுல ஒர்க் ஆகும். 6GB RAM, 128GB Storage-ஓட வருது. UFS 2.2 LPDDR4X ஸ்டோரேஜ் டைப் யூஸ் பண்ணிருக்காங்க.

8mm திக்னஸ், 197g வெயிட் 6.67 இன்ச் Super AMOLED FHD+ டிஸ்ப்ளே, 120Hz Refresh Rate கொண்டது
30MP (Sony IMX 182) + 2MPனு +16 MP கேமரா இருக்கு. Android 14 with Nothing Os -ல இயங்குது, 2 வருஷ Software அப்டேட் , 3 வருஷ security patch update கிடைக்கும். IP 52 ரேட்டிங் இருக்கு.
5000mAh பேட்டரி,33 W Charger, ஆனா சார்ஜர் பாக்ஸ்ல இல்லங்கிறது ஒரு மைனஸ். டிஸ்ப்ளேலயே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் இருக்கு. தனித்துவமான, கஸ்டமைஸ் பண்ணிக்க கூடிய டிசைன், அப்புறம் மோனோ ஸ்பீக்கர் இதுல இருக்கு.
சிறப்பு அம்சங்களா HDR 10+ support இருக்கு.
Poco X7: கேமரா லவ்வர்ஸ்க்கு அல்டிமேட் சாய்ஸ்!
போட்டோ எடுக்குறதுல ஆர்வம் அதிகமா இருக்குறவங்களுக்கு Poco X7 பெஸ்ட் சாய்ஸ். Flipkart-ல 16,999 ரூபாய்க்கு கிடைக்குது (கார்டு ஆஃபரோட 15,999 ரூபாய்). இதுல MT 7300 Ultra-4nm Processor இருக்கு, 2.5GHz ஸ்பீடுல ஒர்க் ஆகும். 8GB RAM, 128GB Storage-ஓட வருது. UFS 2.2-LPDDR4X ஸ்டோரேஜ் டைப் யூஸ் பண்ணிருக்காங்க.
Glass Back டிசைன்,8.6mm திக்னஸ், 186.5g வெயிட்,6.67 இன்ச் Curved AMOLED FHD+ டிஸ்ப்ளே, 120Hz Refresh Rate கொண்டது.

கேமராவ பத்தி பேசினா, பின்னாடி 86MP OIS + 8MP + 2MPனு ட்ரிபிள் கேமரா இருக்கு, அதோட 20MP selfie camera உம் இருக்கு. Details, Photos தெளிவாவும், கிளீனாவும் இருக்கும். போர்ட்ரெய்ட் போட்டோஸ் நல்லா இருக்கும் . அல்ட்ராவைட் கேமரா ஒகே வா இருக்கும். 20MP செல்ஃபி கேமரா நல்ல இருக்கு .ஆனால் Low light photos அவ்வளவு சிறப்பாக இருக்காது.
Android 14 HyperOS-ல இயங்குது, 3 வருஷ OS அப்டேட், 4 வருஷ செக்யூரிட்டி பேட்ச் கிடைக்கும்.IP68 ரேட்டிங், HDR10+, BT-5.3னு எக்ஸ்ட்ரா பீச்சரும் இருக்கு. 67W சார்ஜிங், 5100mAh பேட்டரி, டிஸ்ப்ளேலயே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், CGG Victus 2 டிசைன், Dolby Atmos-ஓட ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்னு அம்சங்கள் நிறைய இருக்கு.
சிறப்பு அம்சங்களா NFC , IR Blaster ,Triple TUV Certification, Wet touch display இருக்கு.
Moto G85 5G: டிஸ்ப்ளேல ஒரு கிங்!
டிஸ்ப்ளே தான் உங்களுக்கு முக்கியம்னா, Moto G85 5G-ய கண்ணை மூடிட்டு வாங்கலாம். Flipkart-ல 15,999 ரூபாய்க்கு கிடைக்கும், ஆனா கார்டு ஆஃபரோட 14,249 ரூபாய்க்கே வாங்கிடலாம். இதுல SD 6S Gen3-6nm Processor இருக்கு, 2.3GHz ஸ்பீடுல ஓடும். 8GB RAM, 128GB Storage-ஓட வருது. UFS 2.2-LPDDR4X ஸ்டோரேஜ் டைப் யூஸ் பண்ணிருக்காங்க.
7.55mm திக்னஸ், 173g வெயிட் , CGG 5, 3D Vegan leather டிசைன், 6.67 இன்ச் FHD+ Curved POLED டிஸ்ப்ளே, 120Hz, 1600 Nits Peak Brightness, HDR 10+னு டிஸ்ப்ளே செம தெளிவா இருக்கும்.

கேமராவ பத்தி பேசினா, பின்னாடி 50MP OIS (Sony LYT 600) + 8MPனு டூயல் கேமரா இருக்கு, அதோட 32MP selfie camera உம் இருக்கு.போட்டோஸ்ல கலர்ஸ் நல்ல இருக்கு . லோ-லைட்ல கொஞ்சம் நாய்ஸ் இருக்கு.
Android 14-ல இயங்குது, 2 வருஷ OS அப்டேட், 4 வருஷ செக்யூரிட்டி பேட்ச் கிடைக்கும். IP52 ரேட்டிங், அப்புறம் Eye care protection, Dual band Wifiனு எக்ஸ்ட்ரா Featursம் இருக்கு. 5000mAh பேட்டரி, 33W சார்ஜிங் (சார்ஜர் பாக்ஸ்லயே இருக்கு),டிஸ்ப்ளேலயே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், Dual Stereo, Dolby Atmos ஸ்பீக்கர்ஸ்னு அம்சங்கள் நிறைய இருக்கு.
Realme P3: ஆல்ரவுண்டர் பர்ஃபார்மன்ஸ்!
இந்த லிஸ்ட்லயே Realme P3, ஒரு ஆல்ரவுண்டர் போன்னு சொல்லலாம். 2025 மார்ச் மாசம் லான்ச் ஆன இந்த போன், Flipkart-ல 15,999 ரூபாய்க்கு கிடைக்குது. ஆனா, கார்டு ஆஃபரோட 15,199 ரூபாய்க்கு வாங்கலாம்.
இதுல Snapdragon 6 Gen 4 – 4nm Processor இருக்கு, 2.5GHz ஸ்பீடுல செமயா ஒர்க் ஆகும். 6GB RAM, 128GB Storage-ஓட வருது. UFS 3.1-LPDDR4X ஸ்டோரேஜ் டைப் யூஸ் பண்ணிருக்காங்க.
7.79mm திக்னஸ், 172.5g வெயிட், Space Design 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz Refresh Rate, 2000 Nits Peak Brightness, HDR 10+ சப்போர்ட்னு டிஸ்ப்ளேவே ஒரு தனி லெவல்.

கேமராவ பத்தி பேசினா, பின்னாடி 80MP OIS (Sony LYT 600) + 2MPனு டூயல் கேமரா இருக்கு.அதோட 20MP selfie camera உம் இருக்கு. Details , dynamic range சூப்பரா இருக்கு, Portraitல Edge detection நல்லா இருக்கு. Low light photos கூட நல்லா இருக்கு.20MP செல்ஃபி கேமரா Photos நல்லா இருக்கு .
Android 15 ல இயங்குது, 2 வருஷ OS அப்டேட், 3 வருஷ செக்யூரிட்டி பேட்ச் கிடைக்கும். IP69 Top Tier water Proof ரேட்டிங்,அப்புறம் Aero space cooling system, 6000 mAh பேட்டரி,80W சார்ஜிங் சப்போர்ட்னு நிறைய எக்ஸ்ட்ரா பீச்சரும் இருக்கு. டிஸ்ப்ளேலயே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்லாம் இருக்கு.
AI Feature Circle to Search , AI Smart loop 2.0 , AI Recording Summary
மொத்தத்துல எது பெஸ்ட்?
இந்த கம்பேரிசன் மூலமா, ஒவ்வொரு போனும் ஒவ்வொரு வகையில ஸ்பெஷலா இருக்குறது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உங்களோட தேவை என்னன்னு பாத்து, இந்த போன்ல ஒன்ன செலக்ட் பண்ணிக்கலாம்.
இந்த கம்பேரிசன் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்னு நம்புறோம். வேற ஏதாவது கேள்வி இருந்தாலும் கமென்ட்ல கேளுங்க. நன்றி!
| அம்சம் | Realme P3 (All Rounder) | Moto G85 5G (Display) | Poco X7 (Camera) | CMF Phone 1 (Software) | Vivo T4X / IQOO Z10X (Battery) |
| நிறைகள் | ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்IP69, நல்ல பெர்ஃபார்மன்ஸ், நல்ல பேட்டரி | Dual Stereo, Dolby Atmos, நல்ல டிசைன், பாதுகாப்பு | Premium டிசைன், நல்ல சாப்ட்வேர், நல்ல Performance, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் | நல்ல டிசைன், சுத்தமான சாப்ட்வேர், நல்ல Performance | நல்ல Performance, நல்ல battery and charging. |
| குறைகள் | Pre installed apps, பிளாஸ்டிக் ஃபினிஷ் | சராசரி கேமரா பர்ஃபார்மன்ஸ், IP52 | Average low light photos, வெறும் 2 முக்கிய OS அப்டேட்கள் மட்டுமே | கேமரா Performanceஅவ்வளவு சிறப்பாக இருக்காது, சார்ஜர் பாக்ஸில் இல்லை | LCD Display , Average Camera , Side mounted Finger print. |
இந்த கம்பேரிசன் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்னு நம்புறோம். வேற ஏதாவது கேள்வி இருந்தாலும் கமென்ட்ல கேளுங்க. நன்றி!