வணக்கம் தமிழ் டுடே டெக் வாசகர்களே! OnePlus Nord CE5 5G பத்தி ஒரு டீட்டெயிலான ரிவ்யூ பாக்கலாம் வாங்க. ஒரு நல்ல கேமரா, கெத்தான டிசைன், அப்புறம் சூப்பரான டிஸ்ப்ளே இருக்குற ஒரு போன் உங்களுக்கு வேணும்னா, இந்த போன் கண்டிப்பா உங்க லிஸ்ட்ல இருக்கும். இதோட விலை, என்னென்ன ஸ்பெக்ஸ் இருக்குன்னு ஒன்னு விடாம பாப்போம்.
Design and Build
OnePlus Nord CE5 பாக்க ரொம்பவே பிரீமியமா இருக்கு. ஆனா, இதுல Back side & Frame பிளாஸ்டிக் தான். Front side ஒரு Flat Dsplay இருக்கு, சுத்தி மினிமம் Bezels கொடுத்திருக்காங்க. Under display finger print reader இருக்கு, இது டக்குனு ஒர்க் ஆகுது, துல்லியமாவும் இருக்கு. IP65 பாதுகாப்பு கொடுத்திருக்காங்க, அதனால தண்ணிலயோ இல்ல தூசுலயோ லேசா பட்டா ஒன்னும் ஆகாது. போன் 199g எடை இருக்கு, 8.1mm தடிமன். இதோட வெயிட் மேனேஜ்மென்ட் நல்லா இருக்கு. Black Infinity, Marble Mist, அப்புறம் Nexus Blue இப்படி மூணு கலர்ல கிடைக்குது.

Display அனுபவம் (Display Experience)
இந்த போனோட 6.77 இன்ச் FHD+ Super Fluid Amoled Display உண்மையிலேயே சூப்பரா இருக்கு. 1 பில்லியன் கலர்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR 10+ சப்போர்ட்லாம் இருக்கு. வீடியோ பாக்கும்போது Viewing Angle, கலர் குவாலிட்டிலாம் நல்லா இருக்கு. 387 PPI, 2392*1080p Resolution இருக்கு. Ultra HDR Colour Depth அப்புறம் கான்ட்ராஸ்ட் இருக்கறதால, சோஷியல் மீடியா, கேம்ஸ்லாம் இன்னும் கலர்ஃபுல்லா தெரியும். 120 Hz Refresh rate இருக்கறதால, போன் ரொம்ப ஸ்மூத்தா இருக்கு, மல்டிடாஸ்கிங் பண்ணும்போது லேக் ஆகாது. உங்க கை ஈரமா இல்ல எண்ணெய் பிசுக்கோட இருந்தாகூட, Aqua touch இருக்கறதால டச் ரெஸ்பான்ஸ் துல்லியமா இருக்கும். 1300 nits HBM மற்றும் 1430 nits Peak brightness இருக்கறதால, வெயில்ல கூட டிஸ்ப்ளே நல்லா தெரியும். HDR 10+, sRGB, DCI-P3 100%, 10bit கலர் டெப்த் எல்லாமே சப்போர்ட் பண்ணுது. Netflix, Amazon Prime-ல கூட HDR சப்போர்ட் இருக்கு.

Battery and Charging
OnePlus Nord CE5 ஒரு பெரிய 7100mAh Li-ion பேட்டரியோட வருது. இது 80W Supervooc ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் பண்ணுது. போன் 100% சார்ஜ் ஆக வெறும் 54 நிமிஷம் தான் ஆகுது. ஒரு நாள் முழுக்க SOT (Screen-On Time) கிடைக்கும். இதுல bypass charging ஒரு ஸ்மார்ட் பவர் ஆப்டிமைசேஷன் டெக்னாலஜி. இது பேட்டரி வழியா இல்லாம, டைரக்ட்டா சார்ஜர்ல இருந்து பவர் எடுத்துக்கும்.

ஆடியோ (Audio)
இதுல மோனோ ஸ்பீக்கர் தான் இருக்கு. பாட்டு கேக்கும்போது சவுண்ட் குவாலிட்டி ஸ்மூத்தா இருக்கு.
கேமரா திறன்கள் (Camera Capabilities)
Nord CE5-ல பின்னாடி ரெண்டு கேமரா, முன்னாடி ஒரு செல்ஃபி கேமரா இருக்கு.
பின் கேமரால, 50MP LYTIA 600 OIS மெயின் கேமரா அப்புறம் 8MP IMX 355 அல்ட்ரா-வைட் இருக்கு. மெயின் கேமரால Dynamic range நல்லா இருக்கு, கலர்ஸ் நேச்சுரலா இருக்கு, தெளிவா டீடைல்ஸ் கிடைக்குது. அட்வான்ஸ்டு HDR algorithm கொடுத்திருக்காங்க. Portrait மோட்ல பேக்ரவுண்ட் ப்ளர் நல்லா இருக்கு, எட்ஜ் டிடெக்ஷனும் நல்லா இருக்கு. லோ லைட்ல கூட டீட்டைல்டான, பிரகாசமான போட்டோஸ் எடுக்க முடியுது, நாய்ஸ் இல்ல. 8 MP அல்ட்ரா-வைட் கேமரால எடுத்த போட்டோஸும் நேச்சுரலா நல்லா இருக்கு. Live photo feature சப்போர்ட் பண்ணுது, அதாவது ஒரு போட்டோ எடுக்குறதுக்கு முன்னாடியும் பின்னாடியும் 1.5 செகண்ட் மொமன்ட்ஸை கேப்சர் பண்ணும்.

பின் கேமரா 4K @ 60 fps வீடியோஸ் எடுக்க முடியும், ஸ்டெபிலைசேஷன் நல்லா இருக்கு, Colors clarity, அப்புறம் Details எல்லாமே நல்லா இருக்கு. இது vlogging, cinematic storytelling பண்றவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.


முன் கேமரால 16MP Sony IMX 480 சென்சார் இருக்கு. இது நேச்சுரல் ஸ்கின் டோனை மேம்படுத்துது. இந்த டெக்னாலஜி இமேஜ் நாய்ஸை குறைச்சு, dynamic range-ஐ மேம்படுத்துது, குறிப்பா கம்ப்ளெக்ஸ் லைட்டிங் கண்டிஷன்ஸ்ல. முன் கேமரா 1080p@60 fps வீடியோஸ் எடுக்க முடியும், ஸ்டெபிலைசேஷன் நல்லா இருக்கு, Colors அப்புறம் Details நல்லா இருக்கு.
செயல்திறன் (Performance)
OnePlus Nord CE5, MT 8350-4nm ப்ராசஸரோட நல்லா Perform பண்ணுது. இதுல Cryo-velocity VC Cooling system இருக்கு, இதுல Graphene based composite vapor chamber cooling 7041mm² மொத்த பரப்பளவோட இருக்கு, இது இந்த Class லயே பெருசு. Antutu score 1343909, throttling stability 58% அப்புறம் wild life extreme test-ல 33.2% stability, Wild Life-ல Maxed out இருக்கு. BGMI-ல கண்டினியூசா கேம் விளையாடும்போது 90 Fps ultra-framerate கிடைக்குது, Heat Issue இல்லை.


சாஃப்ட்வேர் மற்றும் ஸ்டோரேஜ் (Software and Storage)
Nord CE5 Android 15 கூட Oxygen OS கொண்டிருக்கு. இதுக்கு 4 வருஷம் Software Updates அப்புறம் 6 வருஷம் Security patches பேட்சஸ் கிடைக்கும். 8 GB LPDDR5X RAM அப்புறம் 256GB UFS 3.1 storage Option இருக்கு. Sequental. Writing speed 672.5 Mbps, Sequental. Reading speed 767.11 Mbps. Oxygen OS-ல Open Canvas மாதிரி புது Multitasking tools இருக்கு.


OnePlus AI அம்சங்கள் (OnePlus AI Features)
OnePlus Nord CE5, OnePlus AI கூட வருது. இதுல AI Search இருக்கு, அதனால Files தேடுறது, செட்டிங்ஸ் மாத்துறது, இல்ல பழைய நோட்ஸ் எடுக்குறதுலாம் ஈஸியா இருக்கும். AI Tool box 2.0 ஒரு sidebar வழியா அணுகலாம், இது நீங்க யூஸ் பண்ற apps ஐ கண்டுபிடிச்சு, அதுக்கு தேவையான AI டூல்ஸை காட்டும். AI Summary, AI Translation, AI Writer, AI Reply மாதிரி அம்சங்கள் இதுல இருக்கு. AI Voice scribe ஒரு நல்ல அம்சம், இது ஆடியோ, வீடியோ அழைப்புகளை ரெக்கார்ட் பண்ணி, summarize பண்ணி, translate பண்ணும். 20-க்கும் மேற்பட்ட மொழிகளை சப்போர்ட் பண்ணுது. Summaries நேரா நோட்ஸ்ல சேவ் ஆகிடும், real time translation ஸ்க்ரீன்ல சப்டைட்டில்ஸ் மாதிரி வரும். தேவைப்பட்டா ஃபுல் transcription-ஐயும் நோட்ஸ்ல சேமிக்கலாம். WhatsApp, Instagram, Telegram, Snapchat, Zoom, அப்புறம் YouTube மாதிரி ஆப்ஸோட இது இன்டெகிரேட் ஆகிருக்கு. AI Creativity அம்சங்களும் இருக்கு, இது AI Eraser, AI Detail Boost, AI Unblur, AI Reflection Eraser, AI Reframe மாதிரி டூல்ஸ் வழியா போட்டோஸ் எடிட் பண்ண உதவும். Circle to Search அம்சம் மூலமா, ஸ்க்ரீன்ல எதையாச்சும் வட்டமிட்டா, அந்த ஆப்ல இருந்தபடியே இன்ஸ்டன்ட்டா சர்ச் ரிசல்ட்ஸ் கிடைக்கும்.

கனெக்டிவிட்டி (Connectivity)
இதுல ஹைபிரிட் சிம் ஸ்லாட் இருக்கு. கால் குவாலிட்டி கிளியரா இருக்கு, நாய்ஸ் இல்லை. சிக்னல் ரிசெப்ஷனும் நல்லா இருக்கு. 10 5G பேண்ட்ஸை சப்போர்ட் பண்ணுது. Bluetooth 5.4, Wifi-6, IR Blaster சப்போர்ட் இருக்கு.
நிறைகள் மற்றும் குறைகள் (Pros and Cons)
| நிறைகள் (Pros) | குறைகள் (Cons) |
| கெத்தான டிசைன் (Premium Design) | மோனோ ஸ்பீக்கர் (Mono speaker) |
| அருமையான டிஸ்ப்ளே (Super display) | வயர்லெஸ் சார்ஜிங் இல்லை (No wireless charging) |
| பெரிய பேட்டரி (Biggest battery) | கேமரா சாஃப்ட்வேர் ஆப்டிமைசேஷன் (Camera software optimisation) |
| ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast charging) | NFC இல்லை (No NFC) |
| VC கூலிங் சிஸ்டம் (VC Cooling system) | Glass Protection இல்லை |
விலை நிலவரம் (Price Details)
OnePlus Nord CE5 மூணு வெர்ஷன்ல வருது. 8GB RAM, 256GB UFS 3.1 Storage இருக்கற மாடல் ₹24,999 ரூபாய்க்கு கிடைக்குது. அப்புறம், 8GB RAM, 128GB Storage இருக்கறது ₹22,999 ரூபா. டாப் எண்ட் மாடலான 12GB RAM, 256GB UFS 3.1 Storage இருக்கறது ₹26,999 ரூபாய்க்கு வருது.
தீர்ப்பு (Verdict)
ஒட்டுமொத்தமா பாக்கும்போது, OnePlus Nord CE5 5G ஒரு நல்ல சாய்ஸ் தான். இது மத்த போட்டியாளர்களை விட நல்ல பெர்ஃபார்மென்ஸ் கொடுக்குது. அதுமட்டும் இல்லாம, ஸ்லீக்கான டிசைன், நல்ல கேமராஸ், ஃபாஸ்ட் சார்ஜிங்லாம் இருக்கு. ஒரு நல்ல கேமரா, பிரீமியம் டிசைன் அப்புறம் 6.77 இன்ச் FHD+Super Fluid Amoled டிஸ்ப்ளே இருக்குற ஒரு போன் உங்களுக்கு வேணும்னா, OnePlus Nord CE5 5G கண்டிப்பா உங்களுக்கு ஒரு நல்ல தேர்வா இருக்கும்.