Oneplus Buds 4: உங்களுக்கான பெர்ஃபெக்ட் ஆடியோ துணையா? ஒரு விரிவான பார்வை!

வணக்கம் Tamiltodaytech வாசகர்களே! இன்னைக்கு நம்ம OnePlus Buds 4 பத்திதான் பார்க்கப் போறோம். இந்த புது இயர்பட்ஸ் எப்படி இருக்கு, என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குனு டீட்டெய்லா பார்ப்போம்.

Sleek design

OnePlus Buds 4 விலை ரூ. 5499. இந்த விலைக்கு இது ஒரு நல்ல Entry-level இயர்பட்ஸ்னு சொல்லலாம். பாக்கவே செம கூலா இருக்குதுங்க. இது குட்டியாவும், வெயிட் கம்மியாவும் (4.7gm) இருக்கறதால காதுல மாற்றத்துக்கு ரொம்ப சௌகரியமா இருக்கு. இதோட Edges எல்லாம் வளைஞ்சு, ஒரு Rounded Shape-ல இருக்கு. Flat Pill-shaped Stems, Flat Touch Area, அப்புறம் Glossy Clear Plastic-ஆன பாடினு ஒரு ஸ்டைலான லுக்கோட வருது. இதோட case ரொம்ப Compact-ஆ இருக்கு. Buds 3 மாதிரி மெல்லிசா இருக்கு.

இது USB Type-C Port வழியா சார்ஜ் ஆகுது. Zen Green மற்றும் Storm Grayனு ரெண்டு கலர் ஆப்ஷன்ஸ்ல கிடைக்குது. Oneplus Buds 4 காதுல ரொம்ப comfortable-ஆ பொருந்துது, weight training பண்றப்பவோ இல்ல ஓடுறப்பவோ கூட கீழ விழாம இருக்கும் .

6mm tweeter & 11mm Woofer

OnePlus Buds 4 நிறைய சுவாரஸ்யமான Features-களைக் கொண்டிருக்கு. ஆடியோவ பத்தி சொல்லணும்னா, இதுல Dual DACs மற்றும் Dual Drivers இருக்கு, இது நல்ல detailed sound reproduction-ஐ கொடுக்கும். 6mm Tweeter மற்றும் 11mm Woofer உடன் வருது. 24-bit depth மற்றும் 192kHz sample rate ஐ சப்போர்ட் பண்ணுது. இதோட Sensitivity 55db/mw மற்றும் Max free response 5500Hz ஆகும். Hi-Res LHDC 5.0 மற்றும் 3D Audio சப்போர்ட் immersive listening experience-ஐ தருது. இதுல Holo Audio வசதியும் இருக்கு, அதோட செட்டிங்ஸையும் customize பண்ணிக்கலாம். Oneplus Buds 4 Bass-rich sound-ஐ கொடுக்குது. Vocals ரொம்ப intimate ஆகவும் pleasing ஆகவும் கேட்குது, கொஞ்சம் detached ஆ இருந்தாலும், treble நல்லா crisp ஆகவும் இருக்கு. Sounds ரொம்ப நல்லா இருக்கு, சூப்பர் details, நல்ல separation இருக்கு. Gamers-க்காக, Buds 4 ஆனது 47ms ultra-low latency Game Mode-ஐ வழங்குது. Sound Customisation-க்கு, உங்களுக்கு மூணு ஆப்ஷன்ஸ் இருக்கு EQ presets, ஒரு bass wave slider (dynamically bass ஐ அதிகரிக்க), balanced, serenade . இதுல Oneplus Audio ID 2.0 இருக்கு, இது ஆடியோ அனுபவத்தை personalize பண்ணும். Golden Sound ஒரு hearing test, உங்களுக்காக custom EQ ஐ உருவாக்குது. இதனால உங்களுக்கு இன்னும் பெட்டரான ஆடியோ குவாலிட்டி கிடைக்கும்.

High performance noise cancellation

இந்த இயர்பட்ஸ் Up to 55dB Adaptive Noise Cancellation மற்றும் Upto 5500Hz Noise Cancellation Range உடன் வருது. இது TUV High Performance Noise Cancellation Certification-ஐயும் வாங்கிருக்கு. Noise Cancellation நல்லா வேலை செய்யுது. High, moderate, low, auto, அப்புறம் off modesனு நிறைய Modes இருக்கு. Transparency Mode-ன் clarity நல்லா இருக்கு, ரொம்ப natural-ஆ கேட்குது. இதுல 3 microphones AI Call Noise Cancellation இருக்கு. Feed forward mic, Feedback mic அப்புறம் Talk micனு மூணும் சேர்ந்து சத்தம், காத்து எல்லாத்தையும் ,filter பண்ணி ரோட்ல, ரெஸ்டாரன்ட்ல, ஆபீஸ்லனு எங்க பேசினாலும் crystal clear calls-ஐ உறுதி செய்யுது. Call quality ரொம்ப தெளிவா, நல்லா இருக்கு. இதுல 55db digital noise reduction வசதியும் இருக்கு.

பேட்டரி லைஃப் பத்தி சொல்லணும்னா, Noise Cancellation On ல இருக்கும்போது Buds-ல 6.5 மணிநேரம், Case உடன் சேர்த்து மொத்தம் 27 மணிநேரம் வரை பேட்டரி கிடைக்கும்னு விளம்பரம் பண்றாங்க. Noise Cancellation Off ல இருக்கும்போது Buds-ல 11 மணிநேரம், Case உடன் சேர்த்து மொத்தம் 45 மணிநேரம் வரை கிடைக்கும். LHDC Codec யூஸ் பண்றப்ப Earbuds-ல 5.5 மணிநேரம், Case உடன் சேர்த்து மொத்தம் 22 மணிநேரம் பேட்டரி கிடைக்கும். ஒரு மணி நேரத்தில் Case உடன் சேர்த்து முழுசா சார்ஜ் ஆகிடும். 10 நிமிஷம் சார்ஜ் போட்டா 7 மணிநேரம் Playback கிடைக்கும்.

Ultimate battery life

கனெக்டிவிட்டியைப் பத்தி பேசுனா, Oneplus Buds 4 Bluetooth 5.4, SBC, AAC அப்புறம் LHDC High Res-ஐ சப்போர்ட் பண்ணுது. ஆனா LDAC சப்போர்ட் இல்ல, AEX adaptive-ம் இல்ல. இதுல ஒரு முக்கியமான Feature AI Translation capability. இது ஒரு Earbud-ஐ தட்டுறது மூலமா real-time conversation conversion-ஐ செய்ய அனுமதிக்குது. Buds 4 ஆனது Google Fast Pair-ஐ சப்போர்ட் பண்ணுது, அதனால சீக்கிரமாவும் ஈஸியாவும் சாதனங்களோட இணைச்சுக்கலாம். Dual-Device Connection அம்சம் ரெண்டு இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு இடையில தடையின்றி மாற அனுமதிக்குது. இது HeyMelody app-ஐ சப்போர்ட் பண்ணுது (Apple மற்றும் Android இரண்டிற்கும்). இதுல in-ear detection, fit test அப்புறம் audio channel feature க்கான switch இருக்கு , Find my earbuds அம்சமும் இருக்கு.

Touch controls மூலமா single, double, triple tap அப்புறம் long hold பண்ணலாம். Volume அல்லது track control-க்கு swipe gesture-ம் இருக்கு. உங்களுக்கு நல்ல customization கிடைக்கும். Noise cancelling on/off மற்றும் transparency mode-க்கு இடையில மாறலாம். கேமராவை யூஸ் பண்றப்ப, போட்டோ எடுக்க double tap பண்ணலாம். இதுல IP55 protection இருக்கு.

ProsCons
Good Sound QualityNo LDAC support
Strong Active Noise CancellationNo AEX adaptive
Realtime AI TranslationNo wireless charging
Good battery life
Advanced connectivity

மொத்தத்துல, Oneplus Buds 4 ஒரு நல்ல entry-level இயர்பட்ஸ்னு சொல்லலாம். நீங்க Wireless இயர்பட்ஸை வாங்கனும்னு நினைச்சா.

Buy link:https://fktr.in/eVVEp4F