வணக்கம் Tamiltodaytech வாசகர்களே!

இன்று நாம் பார்க்கப்போவது OnePlus நிறுவனத்தின் புதிய neckband இயர்போன், OnePlus Bullet Wireless Z3. இது அதன் முந்தைய வெர்ஷனான Z2 உடன் ஒப்பிடும்போது பெரிய மேம்படுத்தல் இல்லையென்றாலும், சில சிறிய மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் உண்மையான பயன்பாட்டில் இதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

இதன் முக்கிய அம்சங்கள்:

  • Fast charging 10 Min for 27 hours
  • Long Lasting runtime
  • 12.4mm Powerful dynamic Drivers
  • IP55 Water & sweat resistance
  • 220mAh battery
  • AAC & SBC Support
  • BT-5.4
  • Google fast pair support
  • 3D Spatial Audio
  • AI Call Noise Cancellation
  • Voice assistant shortcut

பெட்டியில் என்ன இருக்கிறது?

OnePlus Bullet Wireless Z3 பெட்டியில் நீங்கள் காண்பவை:

  • OnePlus Bullet Wireless Z3 neckband
  • மூன்று வெவ்வேறு அளவுகளில் (Small, Medium, Large) சிலிக்கான் இயர்டிப்ஸ்
  • ஒரு பயனர் வழிகாட்டி மற்றும் வாரண்டி கார்டு

வடிவமைப்பு (Design):

skin-friendly silicone and an ergonomically curved design

OnePlus Bullet Wireless Z3 இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது: Mambo Midnight (கிளாசிக் கருப்பு) மற்றும் Samba Sunset (அடர் சிவப்பு).

இது 26g எடை கொண்டது, கழுத்தைச் சுற்றி எளிதாக அணிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிமாணங்கள் 12.43 cm நீளம், 17.45 cm அகலம், 1.31 cm உயரம். நாள் முழுவதும் அணியும் வகையில், சருமத்திற்கு ஏற்ற சிலிக்கான் மற்றும் ergonomic வடிவமைப்புடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் காந்தக் கட்டுப்பாடுகள் உள்ளன. இது இசையை நிறுத்த, இணைப்பை நீக்க மற்றும் இணைக்க உதவுகிறது. பட்டன் அழுத்தங்கள் (Press, Double press, Triple press, Press and hold) மூலம் பாடல் மாற்றுதல், Volume கூட்டல் குறைத்தல் போன்ற Customisation வசதிகளும் உள்ளன. Indicator light மூலம் Pairing மற்றும் Charging நிலையை அறியலாம். IP55 ஆதரவு இருப்பதால், வியர்வை மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாக்கிறது. எனவே உடற்பயிற்சியின் போதும் கவலைப்படாமல் பயன்படுத்தலாம்.

IP55 Water and sweat protection

பேட்டரி (Battery):

Z3-ன் சிறந்த அம்சங்களில் ஒன்று அதன் பேட்டரி ஆயுள். இதில் 220mAh பேட்டரி உள்ளது, இது 50% Volume-ல் 36 மணிநேரம் மியூசிக் பிளேபேக் மற்றும் 21 மணிநேரம் கால் டைம் வழங்குகிறது. வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால், 27 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என்பது மற்றொரு சிறப்பம்சம்.

இதில் எந்தவிதமான சார்ஜிங் கேபிளும் கொடுக்கப்படவில்லை. உங்கள் போனின் Type-C கேபிளைப் பயன்படுத்த வேண்டும். ஒரு முழு நாள் பயன்பாட்டிற்கு இது போதுமானது.

36 hours music playback

ஒலி அனுபவம் (Sound Experience):

Z3 ஆனது 12.4mm dynamic bass drivers உடன் வருகிறது. இது சிறந்த ஒலி மற்றும் டீசண்டான ஆழத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளி இடங்களில் (Outdoor conditions) இதன் ஒலி போதுமானதாக இருந்தது. எனது சோதனையில் 65% அல்லது 70% க்கு மேல் Volume-ஐ அதிகரிக்கத் தேவையில்லை. இதன் ஒலி profile, Bass-ஐ அதிகமாகக் கொண்டுள்ளது, இது Beats, Movies மற்றும் Workouts-க்கு சிறப்பாக இருக்கும்.

ஒட்டுமொத்தமாக, டீசண்டான ஒலி தரம். Voice clarity நன்றாக இருந்தது, இந்த விலை வரம்பில் Instrumental separation மற்றும் clarity நன்றாக உள்ளது, ஆனால் High pitch உச்சரிப்பு சராசிரியாக இருந்தது. இது Balanced sound quality இல்லை, Bass-ஐ நோக்கி சற்று சாய்ந்துள்ளது.

3D Spatial audio algorithms மற்றும் 360 டிகிரி ஒலி புலம், ultra-realistic கேட்கும் அனுபவத்தை வழங்குகிறது.

3D Spatial Audio

இது AAC மற்றும் SBC Codec-களை ஆதரிக்கிறது. Eldac போன்ற high-res codec இல்லை என்றாலும், Spotify அல்லது YouTube stream செய்வதற்கு இது ஒரு பெரிய குறையாக இருக்காது. தினசரி பயன்பாட்டிற்கு, ஒலி energetic, loud மற்றும் enjoyable ஆக இருக்கும்.

இதன் frequency response range 20Hz முதல் 20,000Hz வரை, driver sensitivity 98±3dB, maximum sound pressure 102dB, மற்றும் impedance 32 ohms ஆகும்.

நான்கு preset sound profiles கொண்ட Sound Master Equalizer-ம் உள்ளது: Balanced, Serenade, Bass மற்றும் Bold. உங்கள் இசை ரசனைக்கு ஏற்ப Bass wave-ஐ customisation செய்யலாம்.

AI Noise Cancellation உடனான அழைப்புகள் (Calls with AI Noise Cancellation)

இதில் AI noise cancellation plus ENC (Environmental Noise Cancellation) உள்ளது. பின்னணி சத்தம் நீக்குதல் சராசிரியாக செயல்பட்டது, Active Noise Cancellation வசதி இதில் இல்லை.

இணைப்பு (Connectivity):

Z3 ஆனது Bluetooth 5.4-ஐ ஆதரிக்கிறது, இதன் வரம்பு 10 மீட்டர் வரை. Google Fast Pair வசதி உள்ளது, இது OnePlus போன்களுக்கு மட்டுமல்ல, எந்த Android சாதனத்துடனும் வேலை செய்யும்.

இயர்போன்களில் காந்தக் கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றை ஒன்றாக இணைத்தால் ஆடியோ இடைநிறுத்தப்படும், இதனால் பேட்டரி சேமிக்கப்படும். பட்டன் பல press செயல்பாடுகளுடன் வருகின்றன, அவை அனைத்தும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.

Smart Voice assistance வசதியும் உள்ளது. மைய பட்டனை அழுத்திப் பிடிப்பதன் மூலம் உங்கள் போனின் வாய்ஸ் அசிஸ்டண்ட்டை activate செய்யலாம். அழைப்புகளை மேற்கொள்ள, இசை கேட்க, நினைவூட்டல்களை அமைக்க போன்றவற்றுக்கு இது உதவுகிறது.

இதன் விலை மற்றும் முடிவுரை ( Verdict )

OnePlus Bullet Wireless Z3-ன் விலை ரூ.1699

OnePlus Bullet Z3 மாணவர்கள், ஜிம்மர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிக Bass விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கருத்து தெரிவிக்கவும்!