மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனாக Motorola One Fusion + பாப்-அப் செல்பீ கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனில் 64 MP மெயின் கேமராவுடன் Quad Camera setup உள்ளது . குறிப்பிடத்தக்க வகையில் இதில் ஒரு பெரிய 5,000 mAh Battery உள்ளது .

இந்தியாவில் Motorola One Fusion + ஸ்மார்ட்போன் விலைமற்றும் விற்பனை தேதி:
Motorola One Fusion + இந்தியாவில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் லான்ச் ஆகி உள்ளது . அதுமட்டுமல்லாமல் ரூ.16,999 என்கிற நம்பமுடியாத சூப்பரான விலையில் விற்பனைக்கு வருகிறது .
இதில் ட்விலைட் ப்ளூ மற்றும் மூன்லைட் ஒயிட் என இரண்டு கலர் வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன . இது வருகிற ஜூன் 24 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது ,
Motorola One Fusion + முழு விவரங்கள்
டூயல் சிம் (நானோ) சப்போர்ட் மற்றும் Android 10 தளத்தில் இயங்குகிறது . இது 6.5 இன்ச் அளவிலானFull HD+ (1,080×2,3400 ) 19.5: 9 திரை விகிதம் உள்ள Notchless டிஸ்ப்ளே உள்ளது .
ஸ்னாப்டிராகன் 730G SoC இல் இயங்குகிறது, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி Storageம் கொண்டுள்ளது ,
Quad Camera Setup பின்புறத்தில் உள்ளது . அதில் f/ 1.8 லென்ஸ் கொண்ட 64 MP Main Camera + f/ 2.2 லென்ஸ் கொண்ட 8 Mp Ultra wide angle Camera + f/ 2.4 லென்ஸ் கொண்ட 5Mp Macro Camera + f / 2.4 லென்ஸ் கொண்ட 2 MP Depth Sensor camera உள்ளன .

முன்பக்கத்தில் , ஒரு 16MP Pop-up Selfie Camera (f/2.2) உள்ளது .
5000 mAh Battery உள்ளது . 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது , ப்ளூடூத் வி 5, வைஃபை 802.11 , 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் டூயல் 4ஜி வோல்டிஇ வசதிகளும் உள்ளன .Motorola One Fusion + பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது, மேலும் இது பிரத்யேக கூகுள் அசிஸ்டென்ட் பட்டனையும் கொண்டுள்ளது. அளவீட்டில் இது 162.9×76.9×9.6 மிமீ மற்றும் 210 கிராம் எடையும் உள்ளது .
இந்த போனை பற்றிய உங்களது கருத்துக்களை கமென்ட் பண்ணுங்க .