லெனோவா நிறுவனம் இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஐடியாபேட் மாடல்கள் இன்டெல் மற்றும் ஏஎம்டி ரைசன் ப்ராசஸர்கள், ஹைப்ரிட் எஸ்எஸ்டி மற்றும் எச்டிடி ஸ்டோரேஜ் விருப்பங்கள், டால்பி ஆடியோ மற்றும் ஆப்ஷனல் பிங்கர் பிரிண்ட் ரீடர் போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களுடன் வருகின்றன.
குறிப்பாக கேமர்களுக்காக, லெனோவா ஐடியாபேட் கேமிங் 3 லேப்டாப் அறிமுகம் ஆகியுள்ளது, இது proprietary gaming keyboard மற்றும் Nvidia GeForce GTX 1660Ti வரையிலான கிராஃபிக்ஸ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3, ஐடியாபேட் ஸ்லிம் 5, ஐடியாபேட் கேமிங் 3, யோகா ஸ்லிம் 7i லேப்டாப்களின் விலை & விற்பனை விவரங்கள்:
இந்தியாவில் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப் ஆனது ரூ.26,990 என்கிற விலை நிர்ணயம் தொடங்கி ரூ.40,990 வரை நீள்கிறது. இது அபிஸ் ப்ளூ மற்றும் பிளாட்டினம் கிரே வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது. இது ஏற்கனவே அமேசான், லெனோவா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அனைத்து லெனோவா பிரத்தியேக கடைகள் மூலமாக வாங்க கிடைக்கிறது.
மறுகையில் உள்ள லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 5 லேப்டாப்பின் ஆரம்ப விலை ரூ.61,990 என்றும், லெனோவா ஐடியாபேட் கேமிங் 3 லேப்டாப் ஆனது ரூ.73,990 என்றும், லெனோவா யோகா ஸ்லிம் 7i லேப்டாப்பின் ஆரம்ப விலை ரூ.82,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 5, ஐடியாபேட் கேமிங் 3 மற்றும் யோகா ஸ்லிம் 7ஐ மாடல்கள் ஆனது அடுத்த மாதம் முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்பின் அம்சங்கள்:
– 14 மற்றும் 15 இன்ச் புல் எச்டி (1,920×1,080 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே
– 10 வது தலைமுறை இன்டெல் அல்லது ஏஎம்டி ரைசன் ப்ராசஸர்
– எஸ்எஸ்டி மற்றும் எச்டிடி விருப்பங்களுடன் ஹைபிரிட் ஸ்டோரேஜ்
– வைஃபை 6 இணைப்பு
– இரண்டு யூ.எஸ்.பி 3.1 போர்ட்கள்
– ப்ரைவஸி ஷட்டருடன் வெப்கேம்
– ஆப்ஷனல் கைரேகை ரீடர் விருப்பத்துடன் பவர் பட்டன்
– டால்பி ஆடியோ ஆதரவு
– 1.6 கிலோகிராம் எடை
– ஒரு முழுமையான சார்ஜில் 8.5 மணிநேர பயன்பாட்டை வழங்கும் பேட்டரி.
லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 5 லேப்டாப்பின் அம்சங்கள்:
– 14 மற்றும் 15 இன்ச் மாடல்கள்
– 10 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 7 மற்றும் ஏஎம்டி ரைசன் 7 விருப்பங்கள்
– என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 330 கிராபிக்ஸ்
– டால்பி ஆடியோ ஆதரவு
– பவர் பட்டனில் ஆப்ஷனல் கைரேகை ரீடர்
– 90 சதவிகிதம் அலுமினிய சேஸ் வடிவமைப்ப
– ப்ரைவஸி ஷட்டர் உடன் உள்ளமைக்கப்பட்ட வெப்கேம்
– யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
– பிளாட்டினம் கிரே, கிராஃபைட் கிரே மற்றும் லைட் டீல் வண்ண விருப்பங்கள்.
லெனோவா ஐடியாபேட் கேமிங் 3 அம்சங்கள்:
– 15.6 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே
– 10 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 7 மற்றும் ஏஎம்டி ரைசன் ப்ராசஸர் விருப்பம்
– என்விடியா ஜிடிஎக்ஸ் 1660 டி கிராபிக்ஸ்
– ரேபிட் சார்ஜ் தொழில்நுட்பம்
– 1.5 மிமீ கீ டிராவல் உடனான கேமிங் கீபோர்ட்.
லெனோவா யோகா ஸ்லிம் 7i அம்சங்கள்:
– 14 இன்ச் டிஸ்ப்ளே
– 4 கே ரெசல்யூஷன் மற்றும் டால்பி விஷன் ஆதரவு
– 10 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 7 மற்றும் ஏஎம்டி ரைசன் 7 ப்ராசஸர் விருப்பங்கள்
– அலுமினிய சேஸ் வடிவமைப்பு
– டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர் சிஸ்டம்
– வைஃபை 6 இணைப்பு ஆதரவு
– ஸ்மார்ட் அசிஸ்ட் அம்சத்துடன் அகச்சிவப்பு (ஐஆர்) கேமரா
– கோர்டானா ஆதரவு
– ஒரு முழுமையான சார்ஜில் 14 மணிநேர பேட்டரி ஆயுள்.